Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/திருமணத்துக்கு இடம் பிடிப்பதில் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் தகராறு

திருமணத்துக்கு இடம் பிடிப்பதில் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் தகராறு

திருமணத்துக்கு இடம் பிடிப்பதில் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் தகராறு

திருமணத்துக்கு இடம் பிடிப்பதில் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் தகராறு

ADDED : ஜூன் 09, 2025 04:39 AM


Google News
வாழப்பாடி: வாழப்பாடி அருகே பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில், இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. முகூர்த்த நாளான நேற்று, அந்த கோவிலில், அதிகாலை, 5:30 மணிக்கு, திருமணம் செய்து கொள்ள, மணமக்கள் வந்திருந்தனர். அவர்க-ளுக்கு, 3,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இருப்-பினும் கோவில் நிர்வாகம் மணமக்கள் வரிசையில் சென்று திரு-மணம் செய்து கொள்ளும்படி வரைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால் திருமணம் செய்ய இடம் பிடிப்பதில், மணமக்களின் உறவினர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தள்ளியபடி தாக்கிக்கொண்டதால், சிறிது நேரம் பதற்றம் உருவா-னது. பின் ஒரு வழியாக சமாதானம் அடைந்து, திருமணங்கள் நடந்தன.

72 ஜோடிக்கு திருமணம்இதுகுறித்து கோவில் அதிகாரி கூறுகையில், 'வைகாசி கடைசி முகூர்த்தம் என்பதால், 72 ஜோடிகள் திருமணம் செய்ய வந்திருந்-தனர். பலர் அதிகாலை, 5:00 முதல், 6:00 மணிக்குள் வந்ததால் நெரிசல் ஏற்பட்டது. மணமக்களை அமரவைத்து திருமணம் செய்து வைப்பதில் உறவினர்கள் இடையே சிறிது நேரம் தகராறு ஏற்பட்டது. முறையாக, 'டோக்கன்' கொடுத்து, வரிசையாக ஜோடிகள் வந்து திருமணம் செய்து கொள்ள தெரிவித்தாலும், குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் வருவதில்லை. இதனால் முதலில் வருபவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

அதேபோல் தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் நேற்று, 31 திருமணங்கள் நடந்ததாக, அதன் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்-பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us