/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்' போலீசில் சார் - பதிவாளர் புகார் 'உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்' போலீசில் சார் - பதிவாளர் புகார்
'உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்' போலீசில் சார் - பதிவாளர் புகார்
'உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்' போலீசில் சார் - பதிவாளர் புகார்
'உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்' போலீசில் சார் - பதிவாளர் புகார்
ADDED : ஜூன் 28, 2025 04:06 AM
மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி பத்திரப்பதிவு அலுவலக பொறுப்பு சார் -- பதி-வாளர் செல்வமணி, 50.
இவர், மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனில் நேற்று அளித்த புகார் மனு:கடந்த, 4ல் வனஜாவின் மகன் அசோக்குமார், பச்சமுத்து என்பவ-ருக்கு நிலம் விற்றார். அதன் ஆவணங்களை சரிபார்த்து, பத்திரப்-பதிவு செய்தேன். அந்த நிலத்துக்கு சம்பந்தம் இல்லாதவர், மகு-டஞ்சாவடியை சேர்ந்த தர்மலிங்கம், 79. இவர் கடந்த, 23ல் உற-வினர்கள், அடியாட்களுடன் வந்து, பத்திரப்பதிவு அலுவலகம் முன் நின்று, நான் லஞ்சம் பெற்று, முறைகேடாக பத்திரப்பதிவு செய்வதாக, உண்மைக்கு புறம்பாக கூறி, என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினார்.
ஊடகத்துக்கு பேட்டி அளித்து, சமூக வலைதளங்களில் பதி-வேற்றி வருவதால், மன உளைச்சல் ஏற்படுகிறது. மேலும் அலு-வலக வாசலில் நின்றுகொண்டு, 'என்னைக்கு வேண்டுமானாலும் அடியாட்களை வைத்து தொலைத்து கட்டாமல் விடமாட்டேன்' என கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் என் உயிருக்கு எப்-போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம் என்பதால், உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.