ADDED : ஜூன் 28, 2025 04:06 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் சார்பில், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், போதை பழக்கத்துக்கு எதிரான விழிப்பு-ணர்வு ஊர்வலம் நேற்று தொடங்கியது.
ஏராளமான மாணவர்கள், சேலம் - பனமரத்துப்பட்டி சாலையில், சந்தைப்பேட்டை சென்று மீண்டும் பள்ளியை அடைந்தனர். அப்போது, போதை பழக்கத்-துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பிடித்துச்-சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் போதை பழக்கத்-துக்கு ஆளாக மாட்டேன் என, உறுதிமொழி ஏற்றனர். ஆசிரி-யர்கள், போலீசார் பங்கேற்றனர்.அதேபோல் ஆத்துார் டவுன் போலீசார் சார்பில், விழிப்புணர்வு பேரணி நடந்தது. டவுன் இன்ஸ்பெக்டர் அழகுராணி தொடங்கி வைத்தார். ஆத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாண-வர்கள், விநாயகபுரத்தில் இருந்து உடையார்பாளையம், ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் வரை ஊர்வலமாக வந்தனர்.
காடையாம்பட்டி, பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில், தலைமை ஆசிரியர் நாகேந்திரன் தலைமையில் நடந்த பேரணியை, தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தொடங்கி வைத்தார். மாணவ, மாணவியர், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி, பள்ளியில் இருந்து பண்ணப்பட்டி பிரிவு வரை சென்று மீண்டும் பள்ளியை அடைந்தனர்.