/உள்ளூர் செய்திகள்/சேலம்/மேட்டூரில் கொட்டிய மழையால் உழவு பணி தொடக்கம்மேட்டூரில் கொட்டிய மழையால் உழவு பணி தொடக்கம்
மேட்டூரில் கொட்டிய மழையால் உழவு பணி தொடக்கம்
மேட்டூரில் கொட்டிய மழையால் உழவு பணி தொடக்கம்
மேட்டூரில் கொட்டிய மழையால் உழவு பணி தொடக்கம்
ADDED : ஜூன் 10, 2024 01:21 AM
மேட்டூர்: மேட்டூர் சுற்றுப்பகுதியில் கடந்த மார்ச், ஏப்ரலில், முந்தைய கோடைகால மாதங்களை விட வெயில் தாக்கம் அதிகம் இருந்தது. அதிகபட்சம், 113 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் அடித்ததால் குன்றுகள், நிலங்களில் வளர்ந்த மரங்கள் கருகியதோடு, நிலங்களில் விவசாயிகள் வளர்த்த தென்னை, மா, பாக்கு உள்ளிட்ட மரங்களும் கருகின.
இந்நிலையில் மேட்டூர், கொளத்துார், மேச்சேரி சுற்றுப்பகுதிகளில் கடந்த மே, 5 முதல் ஜூன், 6 வரை, இடைவெளி விட்டு விட்டு, 13 நாட்களில், 226.9 மி.மீ., மழை பெய்தது. இதனால் நிலங்களில் ஈரப்பதம் அதிகரித்தது. குன்றுகளில் ஏற்கனவே வறட்சியால் கருகிய கருவேல மரங்கள், கோடை மழையால் மீண்டும் பசுமையாக மாறியது.
மேலும் நிலங்களில் ஈரப்பதம் அதிகரிக்க, அதற்கேற்ப மேட்டூர் அணை கரையோர கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், அணை கரையோரம் உள்ள நிலங்களை உழுது வேர்கடலை, பருத்தி, எள் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்ய தொடங்கி உள்ளனர்.