/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பஸ் இல்லாததால் குரூப் - 4 தேர்வர்கள் அவதி பஸ் இல்லாததால் குரூப் - 4 தேர்வர்கள் அவதி
பஸ் இல்லாததால் குரூப் - 4 தேர்வர்கள் அவதி
பஸ் இல்லாததால் குரூப் - 4 தேர்வர்கள் அவதி
பஸ் இல்லாததால் குரூப் - 4 தேர்வர்கள் அவதி
ADDED : ஜூன் 10, 2024 01:22 AM
ஆத்துார்: சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு நேற்று நடந்தது. அதில் ஆத்துார், தலைவாசல் பகுதிகளில் உள்ள தேர்வு மையங்கள் வழியே சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
ஆனால் நேற்று தேர்வு எழுதி முடித்ததும், மதியம், 12:30 மணிக்கு மேல், தலைவாசல், தேவியாக்குறிச்சி, மணிவிழுந்தான், அம்மம்பாளையம் உள்ளிட்ட மையங்கள் வெளியே, தேர்வு எழுதியவர்கள் காத்திருந்தனர். அரசு மப்சல், எக்ஸ்பிரஸ் பஸ்கள் வந்தபோது, அந்த பஸ்களை போலீசார் நிறுத்தி, பெண் தேர்வர்களை அனுப்பினர். அதில் இடநெருக்கடியில் பயணித்தனர். டவுன் பஸ்கள் இல்லாததால், ஒரு மணி நேரத்துக்கு மேல் பலரும் காத்துக்கிடந்தனர்.
தவிர, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தேர்வர்கள், பைக், மொபட்டுகளில் சென்றதால் சாலை முழுதும் வாகனங்கள் நிரம்பி இருந்தன.