குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்
ADDED : பிப் 25, 2024 03:37 AM
சேலம்: சேலம், சிவதாபுரம் சித்தர் கோவில் பிரதான சாலையில் மலங்காட்டான் தெரு உள்ளது. அங்கு சில நாட்களாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், நேற்று காலை, 9:00 மணிக்கு, சித்தர்கோவில் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
கொண்டலாம்பட்டி போலீசார், மாநகராட்சியின் சூரமங்கலம் செயற்பொறியாளர் திலகம் உள்ளிட்டோர் பேச்சு நடத்தி, குடிநீர் வினியோகம் விரைவில் சீர்செய்யப்படும் என, உறுதியளித்தனர். இதனால் மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.