ஓம் பிர்லா மகள் குறித்து அவதூறு: பதிவுகளை நீக்க கூகுள், எக்ஸ்-க்கு உத்தரவு
ஓம் பிர்லா மகள் குறித்து அவதூறு: பதிவுகளை நீக்க கூகுள், எக்ஸ்-க்கு உத்தரவு
ஓம் பிர்லா மகள் குறித்து அவதூறு: பதிவுகளை நீக்க கூகுள், எக்ஸ்-க்கு உத்தரவு
ADDED : ஜூலை 23, 2024 05:37 PM

புதுடில்லி: லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவின் மகளான அஞ்சலி பிர்லாவுக்கு எதிரான அவதூறான பதிவுகளை நீக்குமாறு, எக்ஸ் மற்றும் கூகுள் சமூக வலைதள நிறுவனங்களுக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார். தொடர்ந்து பயிற்சி பெற்று ஐ.ஏ.எஸ் ஆன அஞ்சலி பிர்லா தற்போது ரயில்வே அமைச்சகத்தின் கீழ் பணியாற்றி வருகிறார்.
மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்த அஞ்சலி பிர்லா தனது தந்தையின் செல்வாக்கினால் தேர்வு எழுதாமலேயே ஐ.ஏ.எஸ் ஆனதாக சமூக வலைத்தளங்களில் பலர் குற்றம் சாட்டினர்.
இது சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், தன் மீது அவதூறு பரப்பும் இத்தகைய சமூக வலைத்தள பதிவுகளை நீக்கக் கோரி டில்லி உயர் நீதிமன்றத்தில் அஞ்சலி பிர்லா அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று (ஜூலை 23) விசாரித்த நீதிமன்றம்,‛‛ அஞ்சலி பிர்லாவுக்கு எதிரான அவதூறான பதிவுகளை நீக்குமாறு, எக்ஸ் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.