/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கூடலுாரில் தனியார் உருக்காலை கட்ட எதிர்ப்பு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட மக்கள் கூடலுாரில் தனியார் உருக்காலை கட்ட எதிர்ப்பு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட மக்கள்
கூடலுாரில் தனியார் உருக்காலை கட்ட எதிர்ப்பு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட மக்கள்
கூடலுாரில் தனியார் உருக்காலை கட்ட எதிர்ப்பு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட மக்கள்
கூடலுாரில் தனியார் உருக்காலை கட்ட எதிர்ப்பு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட மக்கள்
ADDED : செப் 16, 2025 01:42 AM
மகுடஞ்சாவடி, :மகுடஞ்சாவடி அருகே கூடலுார் ஊராட்சி, கிழக்குபாளையம் மேட்டுக்காட்டில், 10 ஏக்கரில், தனியார் இரும்பு உருக்காலை கட்டுமானப்பணி நடந்து வருகிறது. பணியை நிறுத்த ஆலை நிர்வாகத்திடம் மக்கள் கூறியும், கட்டுமானப்பணி தொடர்கிறது.
இதனால் நேற்று காலை, 10:00 மணிக்கு, அப்பகுதி மக்கள், மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, அரை மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தி, மக்களிடம் புகார் மனுவை பெற்றுக்கொண்டனர்.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது: கடந்த ஆண்டு தனியார் இரும்பு உருக்காலை அமைக்க முயன்றனர். அப்போது எதிர்ப்பு தெரிவித்தோம். வருவாய்த்துறை, கலெக்டர், மகுடஞ்சாவடி போலீசார் என பலதரப்புக்கும் புகார் அளித்த நிலையில், கட்டுமானப்பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஒரு வாரமாக மீண்டும் பணி நடக்கிறது. ஆலை நிர்வாகத்திடம் எதிர்ப்பு தெரிவித்தபோது, 'அனுமதி வாங்கிவிட்டோம்' என்கின்றனர்.
ஆலை இயங்கினால் சுற்றுச்சூழல் பாதிக்கும். சுற்றுவட்டாரத்தில், 500 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. அதை நம்பியே உள்ளோம். நிலத்தடி நீர் கெட்டு, வாழ்வாதாரம் பாதிக்கும். ஆலை பணியை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.