/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பாலத்தின் மேற்கே இருள் வழிப்பறி அச்சத்தில் மக்கள் பாலத்தின் மேற்கே இருள் வழிப்பறி அச்சத்தில் மக்கள்
பாலத்தின் மேற்கே இருள் வழிப்பறி அச்சத்தில் மக்கள்
பாலத்தின் மேற்கே இருள் வழிப்பறி அச்சத்தில் மக்கள்
பாலத்தின் மேற்கே இருள் வழிப்பறி அச்சத்தில் மக்கள்
ADDED : செப் 10, 2025 02:17 AM
பனமரத்துப்பட்டி, சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை, பனமரத்துப்பட்டி பிரிவில் உள்ள மேம்பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலை உள்ளது. பாலத்தின் கிழக்கு பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு உள்ளது. ஆனால் பாலத்தின் மேற்கே சர்வீஸ் சாலையில் உள்ள, ஊராட்சியின் தெருவிளக்குகள் எரியவில்லை.
அதனால் சர்வீஸ் சாலை சந்திப்பு பகுதியில் இருள் சூழ்ந்துள்ளது. இரவில் மல்லுார், ராசிபுரம், வெண்ணந்துார், ஆட்டையாம்பட்டி பகுதியில் இருந்து பஸ் மூலம் வரும் மக்கள், பனமரத்துப்பட்டி பிரிவு மேற்கு சர்வீஸ் சாலை நிறுத்தத்தில் இறங்குகின்றனர். அங்கு நிலவும் இருளால் தட்டுத்தடுமாறி செல்லும் மக்களிடம் வழிப்பறி சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. அப்பகுதியில் தெருவிளக்கை எரிய வைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.