/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நுாலகம் முன் நிழற்கூடம் இல்லாததால் கல்லுாரி மாணவர்கள் அவதி நுாலகம் முன் நிழற்கூடம் இல்லாததால் கல்லுாரி மாணவர்கள் அவதி
நுாலகம் முன் நிழற்கூடம் இல்லாததால் கல்லுாரி மாணவர்கள் அவதி
நுாலகம் முன் நிழற்கூடம் இல்லாததால் கல்லுாரி மாணவர்கள் அவதி
நுாலகம் முன் நிழற்கூடம் இல்லாததால் கல்லுாரி மாணவர்கள் அவதி
ADDED : செப் 10, 2025 02:18 AM
சேலம், நுாலகம் முன் நிழற்கூடம் இல்லாததால் கல்லுாரி மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
சேலம், குமாரசாமிப்பட்டி, செரி ரோட்டில் அரசு கலைக்கல்லுாரி, எல்லைப்பிடாரி அம்மன் கோவில், மாவட்ட மைய நுாலகம் ஆகியவை அடுத்தடுத்து அமைந்துள்ளன. நுாலகம் முன் மரவனேரி பிரதான சாலை பிரிவுக்கு முன் உள்ள பஸ் ஸ்டாப்பில் தினமும் ஏராளமான மாணவர்கள் பஸ்சில் ஏறி இறங்கி செல்கின்றனர்.
தவிர மாவட்ட மைய நுாலகத்துக்கு வரும் வாசகர்கள், போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்ய வரும் மாணவர்கள் என, தினமும் ஏராளமான பயணியர் பயன்படுத்தும் ஸ்டாப்பில் நிழற்கூடம் இல்லாததால், வெயில், மழையில் காத்திருந்து பஸ் ஏறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மதியம், மாலை வேளைகளில் ஏராளமான கல்லுாரி மாணவர்கள், அங்கு பஸ் ஏறி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டி
கள் அவதிப்படுவதோடு, விபத்து அபாயம் நிலவுகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்கு
வரத்து நெரிசல் இல்லாத பகுதியில் நிழற்கூடத்துடன் பஸ் ஸ்டாப் கட்டித்தர நடவடிக்கை எடுக்க
வேண்டும்.