ADDED : ஜூன் 15, 2024 07:07 AM
சேலம் : 'சாய் சில்க்ஸ் கலாமந்திர் லிமிடெட்'டின், காஞ்சிபுரம் வர மஹாலட்சுமி சில்க்ஸின் புது கிளை திறப்பு விழா சேலம், புது பஸ் ஸ்டாண்ட் எதிரே நேற்று நடந்தது. அதில் ஸ்ரீஸ்ரீசெண்டலங்கார செண்பக மன்னார் சம்பத்குமார ராமானுஜ ஜீயர் சுவாமிகள், ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். லிமிடெட் இயக்குனர்கள் ராஜேஷ், சுபாஷ், நிர்வாக இயக்குனர் சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து லிமிடெட் நிறுவன நிர்வாக இயக்குனர் பிரசாத் சாலவாடி கூறியதாவது:
கடையில் பாரம்பரிய சேலைகள், திருமணம், விழாக்களுக்கு கைத்தறி சேலைகள் உள்ளன. பனாரஸ், படோலா, பைதானி, ஆர்கன்சா, குப்படம், காஞ்சிபுரம் உள்ளிட்ட உயர் ரக சேலைகள் கிடைக்கும். மார்க்கெட்டில் மிகக்குறைந்த விலைக்கு உத்தரவாதம். இந்த நிறுவனம், 2024ம் நிதியாண்டில், 1,373.55 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து, 100.87 கோடி ரூபாயை லாபம் ஈட்டியுள்ளது.
பங்குச்சந்தை முதலீட்டில் முதல்முறை பங்குகளை வெளியிட்ட, முதல் சேலை விற்பனை நிறுவனமாகவும் உள்ளது. இது தமிழகத்தில், 10 கிளை, சேலத்தில், 2 கிளை என, நாடு முழுதும், 61 கிளைகள், 6.47 லட்சம் சதுரடியில் விற்பனையகத்தை கொண்ட நிறுவனம்.
இவ்வாறு அவர் கூறினார்.