/உள்ளூர் செய்திகள்/சேலம்/புது ரேஷன் கடை திறந்தும் பிரயோஜனமில்லை: மூதாட்டிகள் அவதிக்கு முற்றுப்புள்ளி எப்போது?புது ரேஷன் கடை திறந்தும் பிரயோஜனமில்லை: மூதாட்டிகள் அவதிக்கு முற்றுப்புள்ளி எப்போது?
புது ரேஷன் கடை திறந்தும் பிரயோஜனமில்லை: மூதாட்டிகள் அவதிக்கு முற்றுப்புள்ளி எப்போது?
புது ரேஷன் கடை திறந்தும் பிரயோஜனமில்லை: மூதாட்டிகள் அவதிக்கு முற்றுப்புள்ளி எப்போது?
புது ரேஷன் கடை திறந்தும் பிரயோஜனமில்லை: மூதாட்டிகள் அவதிக்கு முற்றுப்புள்ளி எப்போது?
ADDED : ஜூலை 25, 2024 01:13 AM
வீரபாண்டி: புதிதாக ரேஷன் கடை கட்டி திறக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலா-கியும் முறையாக செயல்படாததால், மூதாட்டிகளின் அவதி வழக்-கம்போல் தொடர்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்-போது என, கேள்வி எழுந்துள்ளது.சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் இனாம் பைரோஜி ஊராட்சி பிச்சம்பாளையத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்-தினர் வசிக்கின்றனர். அவர்கள் ரேஷன் பொருட்களை வாங்க, 5 கி.மீ.,ல் உள்ள இனாம் பைரோஜி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் அருகே உள்ள ரேஷன் கடைக்கும், 1 கி.மீ.,ல் உள்ள சென்னகிரி ரேஷன் கடைக்கும் செல்கின்றனர். இரு ரேஷன் கடைகளும் பகுதி நேரம் செயல்படுபவை என்-பதால் வாரத்தில் ஒருநாள் மட்டும் செயல்படுகிறது. இருப்பினும் பிச்சம்பாளையம் மக்கள், குறிப்பிட்ட ரேஷன் கடைகளுக்கு செல்-லும்போது அனைத்து பொருட்களும் ஒரே நாளில் வழங்கப்படுவ-தில்லை. இதனால் மக்கள் கோரிக்கைப்படி, பிச்சம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே, 2022ல், தி.மு.க.,வை சேர்ந்த, அப்-போதைய சேலம் எம்.பி., பார்த்திபன், தொகுதி வளர்ச்சி நிதியில், 13.70 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து இரு அறைக-ளுடன் கூடிய கான்கிரீட் கட்டடம், சாய்வு தள வசதியுடன் ரேஷன் கடை கட்டி முடிக்கப்பட்டது.கடந்த ஆண்டு எம்.பி., - அதிகாரிகளால் திறப்பு விழா நடத்தப்-பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. ஏனெனில் அன்று மட்டும் கடை செயல்பட்டது. பின் மாதத்தில் ஒரு நாள் திறப்-பதே பெரிய விஷயம் என, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். பெரும்பாலான நாட்கள் பூட்டியே வைக்கப்பட்டுள்ளதால், வழக்-கம்போல் மக்களின் அவதி தொடர்கிறது.
இதுகுறித்து சேலம் தெற்கு வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஸ்-வரி கூறுகையில், ''இனாம் பைரோஜி தொடக்க வேளாண் கூட்டு-றவு சங்க கட்டுப்பாட்டில் பிச்சம்பாளையத்தை சுற்றியுள்ள, 4 பகுதி நேர ரேஷன் கடைகளுக்கு ஒரே விற்பனையாளர் மற்றும் பி.ஓ.எஸ்., எனும், 'பாயின்ட் ஆப் சேல்' கருவி உள்ளதால் சுழற்சி முறையில் வாரம் ஒருமுறை பொருட்கள் விற்கப்படுகின்றன. இனாம் பைரோஜி, சென்னகிரி கடைகளில் இருந்து கார்டுகளை கண்டறிந்து பிரித்து புதிதாக திறக்கப்பட்டுள்ள பிச்சம்பாளையம் ரேஷன் கடைக்கு மாற்றம் செய்து வாரத்தில் ஒருநாள் திறந்து அனைத்து பொருட்களும் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
புதிதாக ரேஷன் கடை கட்டி திறந்தும் முறையாக பயன்பாட்டுக்கு வரவில்லை. 3 மாதங்களாக மாதம் ஒருமுறை மட்டும், காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை கடை திறக்கப்படுகிறது. மேலும் அரிசி, சர்க்கரை மட்டும் வழங்கப்படுகின்றன. பாமாயில், துவரம் பருப்பு வாங்க, மற்றொரு நாளில் இனாம் பைரோஜி ரேஷன் கடைக்கு செல்ல வேண்டியுள்ளது.- மகேஸ்வரி, 42. பிச்சம்பாளையம்.
ரேஷன்கடை கட்டியும் பூட்டியே கிடப்பதால் பெண்கள், முதியோர், 5 கி.மீ., சென்று பொருட்களை வாங்கி வர வேண்டி-யுள்ளது. ஒரே நாளில் அனைத்து பொருட்களும் வழங்காததால் மாதத்தில் குறைந்தபட்சம், 3 முறை செல்ல வேண்டியுள்ளது. மேலும் பிச்சம்பாளையத்துக்கு பஸ் வசதியின்றி முதியோர், தனியே வசிக்கும் பெண்கள், நடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது.- ராமாயி, 55, பிச்சம்பாளையம்.