உண்டியலை உடைத்து திருடிய 3 பேர் கைது
உண்டியலை உடைத்து திருடிய 3 பேர் கைது
உண்டியலை உடைத்து திருடிய 3 பேர் கைது
ADDED : ஜூலை 25, 2024 01:13 AM
தாரமங்கலம்: தாரமங்கலம், கோனேரிவளவில் வனபத்ர காளியம்மன் கோவில் உள்ளது.
பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த குமார், 46, உள்ளார். அவர் நேற்று முன்தினம் கோவிலை பூட்டி அருகே உள்ள வீட்-டுக்கு சென்றார். அதிகாலை, 2:00 மணிக்கு நாய் குரைக்கும் சத்தம் கேட்டு குமார் வெளியே வந்தபோது, உண்டியலை உடைத்து பணம் திருடிக்கொண்டிருந்த மர்ம நபர்கள் தப்பி ஓடினார். குமார் கூச்சலிட, மக்கள் வந்து மர்ம நபர்களை பிடித்து தாரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், சோளம்பள்ளத்தை சேர்ந்த செல்வகணபதி, 23, மற்றும், 19 வயதுடைய இரு சிறு-வர்கள் என தெரிந்தது. அவர்கள் திருடிய, 1,200 ரூபாய், உடைக்க பயன்படுத்திய இரும்பு கம்பியை பறிமுதல் செய்து, 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.