திரவுபதி அம்மனுக்கு தாலி அணிவிப்பு
திரவுபதி அம்மனுக்கு தாலி அணிவிப்பு
திரவுபதி அம்மனுக்கு தாலி அணிவிப்பு
ADDED : செப் 10, 2025 02:15 AM
ஆத்துார், நரசிங்கபுரம் திரவுபதி அம்மன் கோவிலில், 41 ஆண்டுக்கு பின் கடந்த, 4ல் கும்பாபிேஷகம் நடந்தது. தினமும் மண்டல பூஜை நடந்து வரும் நிலையில் நேற்று, திரவுபதி அம்மனுக்கு தாலி அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதில் கோவில் விழா குழு சார்பில், 300க்கும் மேற்பட்ட பெண்கள், 108 சீர்வரிசை தட்டுகளுடன், அம்மனுக்கு தாலி உள்ளிட்ட பூஜை பொருட்களை எடுத்து, மேள தாளங்களுடன் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து கோவிலில் பூஜை செய்து, அம்மனுக்கு தாலி அணிவிக்கப்பட்டது. அம்மன் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.