/உள்ளூர் செய்திகள்/சேலம்/ எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் மாணவ, மாணவியருக்கு பரிசு எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் மாணவ, மாணவியருக்கு பரிசு
எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் மாணவ, மாணவியருக்கு பரிசு
எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் மாணவ, மாணவியருக்கு பரிசு
எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் மாணவ, மாணவியருக்கு பரிசு
ADDED : செப் 10, 2025 02:14 AM
சேலம், சேலத்தில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் சார்பில், விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம், நேற்று காலை, 6:00 மணிக்கு நடந்தது. கூடுதல் கலெக்டர் விவேக்யாதவ் தொடங்கி வைத்தார். அஸ்தம்பட்டி சிறை முனியப்பன் கோவில் வளாகத்தில் தொடங்கிய, 5 கி.மீ., ஓட்டம், டி.ஐ.ஜி., அலுவலகம், மத்திய சிறை பின்புறம், அம்மா உணவகம், அஸ்தம்பட்டி
சந்திப்பு வழியே, டி.ஐ.ஜி., அலுவலக பகுதியில் நிறைவடைந்தது.
கல்லுாரி மாணவ, மாணவியர், செஞ்சுருள் சங்கத்தினர் பங்கேற்றனர். தனியார் மகளிர் கல்லுாரியை சேர்ந்த மாணவியர் முறையே கவுரி, வைத்தீஸ்வரி, சர்மிளா ஆகியோர், முதல் மூன்று பரிசுகள் வீதம், 10,000, 7,000, 5,000 பெற்றனர். ஆறுதல் பரிசாக, சந்தியா, ராஜேஸ்வரி, மவுனிகா ஆகியோர் தலா, 1,000 ரூபாய் பெற்றனர்.
அதேபோல் மாணவர் பிரிவில் முதல் மூன்று பரிசுகள் வீதம் தனுஷ், தயாசாகர், விக்கேஷ் ஆகியோரும், ஆறுதல் பரிசை, பரமேஸ்வரன், கோகுல், நிஷாந்த், ஜீவா ஆகியோரும் பெற்றனர்.
இதுகுறித்து, எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாடு மைய அதிகாரிகள் கூறுகையில், 'வெற்றி பெற்றவர்களின் வங்கி கணக்கில் பரிசு தொகை அனுப்பப்படும். இவர்கள், அடுத்து மாநில போட்டிக்கு சென்னைக்கு அனுப்பப்படுவர்'
என்றனர்.