/உள்ளூர் செய்திகள்/சேலம்/நிலம் அளவீடு செய்ய எதிர்ப்பு: 3 பேர் மீது போலீசார் வழக்குநிலம் அளவீடு செய்ய எதிர்ப்பு: 3 பேர் மீது போலீசார் வழக்கு
நிலம் அளவீடு செய்ய எதிர்ப்பு: 3 பேர் மீது போலீசார் வழக்கு
நிலம் அளவீடு செய்ய எதிர்ப்பு: 3 பேர் மீது போலீசார் வழக்கு
நிலம் அளவீடு செய்ய எதிர்ப்பு: 3 பேர் மீது போலீசார் வழக்கு
ADDED : ஜூலை 18, 2024 02:04 AM
சேலம்: நீதிமன்ற உத்தரவு படி, நிலம் அளவீடு செய்வதை தடுத்த மூன்று பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கருப்பூர் மேட்டுப்பதி பகுதியை சேர்ந்தவர் ராஜரத்தினம், 54, இவருக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்ய சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு அளித்து, நில அள-வீடு செய்ய அனுமதி பெற்றார். நீதிமன்ற உத்தரவின்படி, நேற்று முன்தினம் ஓமலுார் வட்ட சார் ஆய்வாளர் சவுந்திரராஜன், சர்-வேயர் பாஸ்கர், வி.ஏ., மாணிக்கவாசகம், ஆர்.ஐ., திருநாவுக்கரசு ஆகியோர் நிலத்தை அளவீடு செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி, 75, என்பவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். இதில், 10 சதவீத தீக்காயம் அடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆர்.ஐ., திருநாவுக்கரசு அளித்த புகார்படி, அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுக்க முயற்சித்த கந்தசாமி, அவரது மகன் விக்னேஷ், ராஜ்குமார் ஆகியோர் மீது சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விக்னேஷ் அளித்த புகார் அடிப்படையில், ராஜரத்தினம் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.