/உள்ளூர் செய்திகள்/சேலம்/சத்துணவு சமையல் கூடம்; விரைந்து முடிக்க அறிவுரைசத்துணவு சமையல் கூடம்; விரைந்து முடிக்க அறிவுரை
சத்துணவு சமையல் கூடம்; விரைந்து முடிக்க அறிவுரை
சத்துணவு சமையல் கூடம்; விரைந்து முடிக்க அறிவுரை
சத்துணவு சமையல் கூடம்; விரைந்து முடிக்க அறிவுரை
ADDED : மே 21, 2025 01:45 AM
பனமரத்துப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, நெய்க்காரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தலா, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் சத்துணவு சமையல் கூடம் கட்டும் பணி நடக்கிறது.
நேற்று, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கோபால், சத்துணவு சமையல் கூடம் கட்டுமான பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அடுத்த மாதம் முதல்வர் ஸ்டாலின், திட்டப்பணிகளை தொடங்கி வைக்க சேலம் வருகிறார். அதற்குள் சத்துணவு சமையல் கூடம் கட்டுமான பணியை தரமான முறையில் செய்து முடிக்க வேண்டும் என, அறிவுறுத்தினார். பனமரத்துப்பட்டி ஒன்றிய கமிஷனர் கார்த்திகேயன், பொறியாளர்கள் உடனிருந்தனர்.