/உள்ளூர் செய்திகள்/சேலம்/ விபத்தில் இருவர் பலியான வழக்கில் லாரி டிரைவர் கைது விபத்தில் இருவர் பலியான வழக்கில் லாரி டிரைவர் கைது
விபத்தில் இருவர் பலியான வழக்கில் லாரி டிரைவர் கைது
விபத்தில் இருவர் பலியான வழக்கில் லாரி டிரைவர் கைது
விபத்தில் இருவர் பலியான வழக்கில் லாரி டிரைவர் கைது
ADDED : மே 21, 2025 01:45 AM
சேலம், சேலம், இரும்பாலை தளவாய்பட்டியை சேர்ந்தவர் சாரதி, 23. சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியை சேர்ந்தவர் சாருபிரியா, 23. இருவரும், சேலம் மாமாங்கம் பகுதியில் ஐ.டி., நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். கடந்த, 17 அதிகாலை, 4:00 மணிக்கு இருவரும் ஒரே பைக்கில்
சென்றனர்.
திருவாக்கவுண்டனுார் பைபாசில் சென்ற போது, சாலையில் இருந்த தண்ணீரில் செல்லாமல் இருக்க வாகனத்தை வளைத்த போது, பின்பக்கமாக தேங்காய் மட்டை ஏற்றி வந்த லாரி, பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் சாரதியும், சாருபிரியாவும் உயிரிழந்தனர். இது குறித்து சூரமங்கலம் போலீசார், லாரி நம்பரை வைத்து விசாரணை நடத்தியதில், விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான தஞ்சாவூர் மாவட்டம், மேலத்துாரை சேர்ந்த ேஷக்தாவூத், 36, என்பவரை நேற்று கைது
செய்தனர்.