/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பால் சங்கத்தில் முறைகேடு 20 பேருக்கு 'நோட்டீஸ்' பால் சங்கத்தில் முறைகேடு 20 பேருக்கு 'நோட்டீஸ்'
பால் சங்கத்தில் முறைகேடு 20 பேருக்கு 'நோட்டீஸ்'
பால் சங்கத்தில் முறைகேடு 20 பேருக்கு 'நோட்டீஸ்'
பால் சங்கத்தில் முறைகேடு 20 பேருக்கு 'நோட்டீஸ்'
ADDED : ஜூன் 16, 2025 06:57 AM
ஆத்துார்: ஆத்துார், மஞ்சினியில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்-கத்தில், சேலம் மாவட்ட பால் வளத்துறை, துணைப்பதிவாளர் புவனேஸ்வரி, இரு நாட்களுக்கு முன் விசாரணை மேற்-கொண்டார். அதில் பணி நீக்கத்தில் உள்ள, சங்க முன்னாள் செயலர் கதிர்வேல், தலைவி வளர்மதி, குழு உறுப்பினர்கள், 1.97 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிந்தது.
பால் கொள்முதலில் முறைகேடு செய்து பணப்பட்டுவாடா செய்-ததில் நிதி இழப்பு, கூட்டுறவு சங்கத்துக்கு நிதியிழப்பு, பால் ஊற்-றாதவர்கள் பெயரில் பணம் எடுத்தது போன்ற முறைகேடு தொடர்பாக, வளர்மதி, கதிர்வேல் உள்ளிட்டோர் நிதி இழப்பு ஏற்-படுத்தியதால், தண்ட தீர்வை நடவடிக்கை மூலம் வசூல் செய்ய, 20 பேருக்கு, 'நோட்டீஸ்' வழங்கினர். இருப்பினும் முறைகேடு குறித்து தொடர்ந்து விசாரணை செய்வதாக, பால் வளத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.