மணமான 4 மாதத்தில் புதுப்பெண் மாயம்
மணமான 4 மாதத்தில் புதுப்பெண் மாயம்
மணமான 4 மாதத்தில் புதுப்பெண் மாயம்
ADDED : மே 24, 2025 02:08 AM
தலைவாசல், தலைவாசல், கவர்பனையை சேர்ந்தவர் சுரேஷ், 30. தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவருக்கு, 4 மாதங்களுக்கு முன், ஐஸ்வர்யா, 27, என்பவருடன் திருமணமானது.
கடந்த, 8ல் வீட்டில் இருந்த ஐஸ்வர்யாவை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், சுரேஷ் நேற்று அளித்த புகார்படி, வீரகனுார் போலீசார் தேடுகின்றனர்.
அதேபோல் மேட்டூர், தொட்டில்பட்டி, கிருஷ்ணசாமி தெருவை சேர்ந்த கட்டட தொழிலாளி குமார், 37. இவர், கடந்த, 16ல் மாயமானார். எங்கு தேடியும் கிடைக்காததால், அவரது மனைவி ஈஸ்வரி நேற்று அளித்த புகார்படி, கருமலைக்கூடல் போலீசார் தேடுகின்றனர்.