ADDED : மே 24, 2025 02:08 AM
சேலம் சேலம் போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவை தொகை வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அ.தி.மு.க., தொழிற்சங்க பேரவை சார்பில், சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
அ.தி.மு.க., தொழிற்சங்க பேரவை துணை தலைவர் பொன் தனபால் தலைமையில் ஏராளமானோர், தி.மு.க., அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். மாநில துணை தலைவர் ராமலிங்கம், மண்டல தலைவர் குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.