Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ முட்டல் ஏரி படகு சவாரியில் அலட்சியம்

முட்டல் ஏரி படகு சவாரியில் அலட்சியம்

முட்டல் ஏரி படகு சவாரியில் அலட்சியம்

முட்டல் ஏரி படகு சவாரியில் அலட்சியம்

ADDED : ஜூன் 08, 2025 01:21 AM


Google News
ஆத்துார், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், முட்டல் ஏரியில் சுற்றுலா பயணியர், படகு சவாரி செய்தனர்.

ஆத்துார் அருகே கல்லாநத்தம் ஊராட்சி, முட்டல் கிராமம், கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ளது. அங்கு, 100 ஏக்கருக்கு மேல் உள்ள ஏரி, வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனைவாரி நீர்வீழ்ச்சி, முட்டல் ஏரி, வனத்துறை சூழல் சுற்றுலா திட்டத்தில் செயல்படுகிறது.

ஏரியில் மோட்டார் படகு இயக்கப்படுகிறது. அங்கு படகு சவாரி சென்ற, 10க்கும் மேற்பட்டோர், பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் சென்றனர். இந்த வீடியோ, சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

மேலும் அசம்பாவிதம் ஏற்படும் முன், வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து ஆத்துார் வனச்சரகர் ரவிபெருமாள் கூறியதாவது:

இரு நாட்களுக்கு முன், பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் படகு சவாரி சென்றுள்ளனர். பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் படகு சவாரி செல்லக்கூடாது என அறிவுறுத்தப்

பட்டுள்ளது.

கண்காணிப்பு பணியில் உள்ள வனத்துறையினரிடம், பாதுகாப்பு பணியில் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us