/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கரு பாலினம் கூறிய 2 பேர் கைது ஸ்கேன் இயந்திரம் பறிமுதல் கரு பாலினம் கூறிய 2 பேர் கைது ஸ்கேன் இயந்திரம் பறிமுதல்
கரு பாலினம் கூறிய 2 பேர் கைது ஸ்கேன் இயந்திரம் பறிமுதல்
கரு பாலினம் கூறிய 2 பேர் கைது ஸ்கேன் இயந்திரம் பறிமுதல்
கரு பாலினம் கூறிய 2 பேர் கைது ஸ்கேன் இயந்திரம் பறிமுதல்
ADDED : ஜூன் 08, 2025 01:22 AM
தலைவாசல், சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே மணிவிழுந்தான் வடக்கு புதுாரில், வாடகைக்கு வீடு எடுத்து, 'ஸ்கேன்' மூலம், தர்மபுரி மாவட்ட கர்ப்பிணியரை காரில் அழைத்து
வந்து, பாலினம் குறித்து தகவல் தெரிவிப்பதாக, தமிழக சுகாதாரத்துறைக்கு புகார் சென்றது.
இதனால் தர்மபுரி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக பணி இணை இயக்குனர் சாந்தி தலைமையில் குழுவினர் நேற்று, மணிவிழுந்தான் புதுாரில் உள்ள வீட்டின் மொட்டை மாடியில் ஆய்வு செய்தனர்.
அப்போது கர்ப்பிணிக்கு, ஸ்கேன் செய்ய முயன்ற, 2 பேரை பிடித்து விசாரித்தபோது, கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்துாரை சேர்ந்த மணிவண்ணன், 36, சேலம், பனமரத்துப்பட்டியை சேர்ந்த பிரசாத், 38, என்பதும், மகளிர் குழுவினருக்கு கடன் வழங்குவது தொடர்பான பணிக்கு வீட்டை வாடகைக்கு எடுப்பதாக கூறி, இத்தொழிலில் ஈடுபட்டதும் தெரிந்தது.
20,000 ரூபாய், ஸ்கேன் இயந்திரத்தை பறிமுதல் செய்த குழுவினர், இருவரையும், தலைவாசல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார், மணிவண்ணன், பிரசாத்தை கைது
செய்தனர்.