சரக்கு லாரி மோதி மும்பை வாலிபர் பலி
சரக்கு லாரி மோதி மும்பை வாலிபர் பலி
சரக்கு லாரி மோதி மும்பை வாலிபர் பலி
ADDED : ஜூலை 03, 2025 02:21 AM
ஏத்தாப்பூர், மும்பையை சேர்ந்தவர் ரமேஷ் மோகன் பட்டேல், 49. இவர், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது நண்பர் வேலுவின் குலதெய்வ சிறப்பு பூஜைக்கு, கடந்த, 26ல் வந்தார். பூஜை முடிந்த நிலையில்,
29 இரவு, 11:40 மணிக்கு, வீரகவுண்டனுார் பகுதியில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது சேலம் நோக்கி வேகமாக வந்த, சரக்கு வாகனம் மோதி, சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஏத்தாப்பூர் போலீசார், உடலை கைப்பற்றிய நிலையில் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.