/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 3 பாலங்கள் கட்டும் பணி: அமைச்சர் துவக்கிவைப்பு 3 பாலங்கள் கட்டும் பணி: அமைச்சர் துவக்கிவைப்பு
3 பாலங்கள் கட்டும் பணி: அமைச்சர் துவக்கிவைப்பு
3 பாலங்கள் கட்டும் பணி: அமைச்சர் துவக்கிவைப்பு
3 பாலங்கள் கட்டும் பணி: அமைச்சர் துவக்கிவைப்பு
ADDED : ஜூன் 26, 2025 02:27 AM
சேலம், சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து வரும் மழைநீரால், அடிவார பகுதியில் இருந்து, மாநகராட்சி பகுதியில் ஓடும் வரட்டாறு, திருமணி முத்தாற்றில் கலக்கிறது. அங்கு சிறு, சிறு பாலங்கள் உள்ள நிலையில், வெள்ளம் பெருக்கெடுத்து செல்லும்போது, போக்குவரத்து துண்டிக்கப்படுகின்றன.
குறிப்பாக, ஏ.டி.சி., நகரில் உள்ள தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக கட்ட, 2.05 கோடி ரூபாய், 15வது வார்டு லட்சுமி சுந்தர் நகர், கே.எம்.எஸ்., கார்டன் பகுதிகளில் வரட்டாற்றின் குறுக்கே பாலங்கள் கட்ட தலா, 3.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இப்பணிகளுக்கு பூமி பூஜை விழா நேற்று நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், கட்டுமானப்பணிகளை தொடங்கிவைத்தார். மேலும் மாநகராட்சியின், 4 மண்டலங்களில், 5.23 கோடி ரூபாய் மதிப்பில், 79 சாலை சீரமைப்பு பணிகளும் தொடங்கிவைக்கப்பட்டன. மேயர் ராமச்சந்திரன், கமிஷனர் இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர்.