/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஓய்வு ஹெச்.எம்., வீட்டில் பட்டாசு தயாரிப்பு 3 பேர் மீது வழக்கு; மூலப்பொருள் பறிமுதல் ஓய்வு ஹெச்.எம்., வீட்டில் பட்டாசு தயாரிப்பு 3 பேர் மீது வழக்கு; மூலப்பொருள் பறிமுதல்
ஓய்வு ஹெச்.எம்., வீட்டில் பட்டாசு தயாரிப்பு 3 பேர் மீது வழக்கு; மூலப்பொருள் பறிமுதல்
ஓய்வு ஹெச்.எம்., வீட்டில் பட்டாசு தயாரிப்பு 3 பேர் மீது வழக்கு; மூலப்பொருள் பறிமுதல்
ஓய்வு ஹெச்.எம்., வீட்டில் பட்டாசு தயாரிப்பு 3 பேர் மீது வழக்கு; மூலப்பொருள் பறிமுதல்
ADDED : ஜூன் 26, 2025 02:26 AM
ஆத்துார், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், அவரது வீட்டில் பட்டாசு தயாரித்து வந்தார். இதனால் அவர் உள்பட, 3 பேர் மீது வழக்குப்பதிந்த போலீசார், 175 கிலோ மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் தம்மம்பட்டி போலீசார், உடையார்பாளையம், ஜோதி நகரில் உள்ள ஒரு வீட்டில் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது உடையார்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் லுார்துசாமி, 64, அவரது வீட்டில் அதிக சத்தத்துடன் வெடிக்கும் நாட்டு வெடிகள், பெரிய பட்டாசுகளை தயாரித்து வந்தது தெரிந்தது. 15,000 ரூபாய் மதிப்பில், அங்கிருந்த, 175 கிலோ பட்டாசு வெடி மருந்து, மூலப்பொருட்கள், பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து லுார்துசாமி, அங்கு வேலை செய்த புஷ்பா, 60, மூலப்பொருட்கள் வழங்கி வந்த, புதுக்கோட்டை ஜோதிமுத்து, 42, ஆகியோர் மீது வழக்குப்பதிந்தனர்.
மேலும் லுார்துசாமி, புஷ்பா ஆகியோர், விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தி, மூத்த குடிமக்களுக்குரிய, 'நோட்டீஸ்' வழங்கினர். மேலும் ஜோதிமுத்து தலைமறைவானதால், அவரை போலீசார் தேடுகின்றனர்.