பாதிக்கப்பட்டோருக்கு அமைச்சர் ஆறுதல்
பாதிக்கப்பட்டோருக்கு அமைச்சர் ஆறுதல்
பாதிக்கப்பட்டோருக்கு அமைச்சர் ஆறுதல்
ADDED : ஜூன் 22, 2024 12:59 AM
சேலம்: கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டவர்களில், 47 பேர், மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில், 17 பேர் இறந்தது போக, நேற்றைய நிலவரப்படி, 30 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில், 15க்கும் மேற்பட்டோரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் அமைச்சர் சுப்பிரமணியன், இரவு, 9:48 மணிக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு சாராய நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தவர், அவர்கள் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க, டீன் மணிக்கு உத்தரவிட்டார். கலெக்டர் பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன், எம்.பி., செல்வகணபதி, மருத்துவ கண்காணிப்பாளர் தனபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.