/உள்ளூர் செய்திகள்/சேலம்/யானை தந்தம் கடத்தி கைதான அரசு பஸ் கண்டக்டர் 'சஸ்பெண்ட்'யானை தந்தம் கடத்தி கைதான அரசு பஸ் கண்டக்டர் 'சஸ்பெண்ட்'
யானை தந்தம் கடத்தி கைதான அரசு பஸ் கண்டக்டர் 'சஸ்பெண்ட்'
யானை தந்தம் கடத்தி கைதான அரசு பஸ் கண்டக்டர் 'சஸ்பெண்ட்'
யானை தந்தம் கடத்தி கைதான அரசு பஸ் கண்டக்டர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூன் 22, 2024 12:59 AM
சேலம்: தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லுார் அருகே வெதரம்பட்டியில் கடந்த, 19ல் மொரப்பூர் வன காவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது காரில் யானை தந்தங்கள் கடத்தி வந்த, சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கோவலன்காட்டை சேர்ந்த விக்னேஷ், 23, முரளிதரன், 32, ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.விசாரணையில், முரளிதரன் அரசு போக்குவரத்து கழகம், இடைப்பாடி பணிமனையில் கண்டக்டராக பணிபுரிவதும், அந்த பணிமனை அண்ணா தொழிற்சங்க தலைவராக பொறுப்பு வகிப்பதும் தெரிந்தது. இதுகுறித்து சேலம் போக்குவரத்து அதிகாரிகளுக்கு, வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். பின் முரளிதரனை, 'சஸ்பெண்ட்' செய்து, சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.