/உள்ளூர் செய்திகள்/சேலம்/எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் கொண்டாட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைஎம்.ஜி.ஆர்., பிறந்தநாள் கொண்டாட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை
எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் கொண்டாட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை
எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் கொண்டாட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை
எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் கொண்டாட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை
ADDED : ஜன 13, 2024 04:02 AM
சேலம்,: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 107-வது பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்து, சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அங்கம்மாள் காலனியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது.
அவைத்தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், ரவிச்சந்திரன், பொருளாளர் வெங்கடாஜலம் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலர் வெங்கடாஜலம் பேசியதாவது:-வரும், 17ல், அண்ணா பூங்காவில் உள்ள மணிமண்டபத்தில், எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். அதில் நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்க வேண்டும். மேலும், 60 வார்டுகளிலும் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். பகுதி செயலர்கள் பாலு, மாரியப்பன், முருகன், யாதவமூர்த்தி, ஜெயபிரகாஷ், சண்முகம், பாண்டியன், பேரவை செயலர், எம்.ஜி.ஆர்., மன்ற செயலர், அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற மாநில துணை செயலர், விவசாய அணி செயலர் சங்கர், ராமு, அண்ணா தொழிற்சங்கம் சுந்தரபாண்டி, பொதுக்குழு உறுப்பினர் ஜான் கென்னடி, கவுன்சிலர்கள் ஜனார்த்தனன், ஜெகதீஷ், ஒன்றிய பாசறை செயலர் பிரவீன் உள்பட பலர் பங்கேற்றனர்.