/உள்ளூர் செய்திகள்/சேலம்/மேட்டூர் அணை நீர்மட்டம் 6 மாதங்களுக்கு பின் உயர்வுமேட்டூர் அணை நீர்மட்டம் 6 மாதங்களுக்கு பின் உயர்வு
மேட்டூர் அணை நீர்மட்டம் 6 மாதங்களுக்கு பின் உயர்வு
மேட்டூர் அணை நீர்மட்டம் 6 மாதங்களுக்கு பின் உயர்வு
மேட்டூர் அணை நீர்மட்டம் 6 மாதங்களுக்கு பின் உயர்வு
ADDED : ஜூலை 05, 2024 01:06 AM
மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி., காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் குறைந்ததால் கடந்த ஜன., 3ல், 731 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து, மறுநாள், 544 கனஅடியாக சரிந்தது. அதற்கேற்ப கடந்த ஜன., 3ல், 71.27 அடியாக இருந்த நீர்மட்டம், மறுநாள், 71.25 அடி-யாக சரிந்தது. பின் நீர்வரத்தை விட திறப்பு கூடுதலாக இருந்-ததால் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வந்தது.
நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு, 818 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 1,223 கனஅடியாக உயர்ந்தது. வினா-டிக்கு, 1,000 கனஅடி நீர் குடிநீருக்கு திறக்கப்பட்டது. திறப்பை விட வரத்து கூடுதலாக உள்ளது. இதனால், 6 மாதங்களுக்கு பின் நேற்று முன்தினம், 39.65 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 39.67 அடியாக சற்று உயர்ந்தது.