/உள்ளூர் செய்திகள்/சேலம்/ விழாவில் பேச விடாமல் தடுத்த மேயர் துணை மேயர் குற்றச்சாட்டால் 'பரபர' விழாவில் பேச விடாமல் தடுத்த மேயர் துணை மேயர் குற்றச்சாட்டால் 'பரபர'
விழாவில் பேச விடாமல் தடுத்த மேயர் துணை மேயர் குற்றச்சாட்டால் 'பரபர'
விழாவில் பேச விடாமல் தடுத்த மேயர் துணை மேயர் குற்றச்சாட்டால் 'பரபர'
விழாவில் பேச விடாமல் தடுத்த மேயர் துணை மேயர் குற்றச்சாட்டால் 'பரபர'
ADDED : மே 26, 2025 04:39 AM
சேலம்,: சேலம் மாநகராட்சி மற் றும் அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா, நேரு கலையரங்கில் நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் முன்-னிலை வகித்தார்.
மேயர் ராமச்சந்திரன் தலைமை வகித்து, 350 மாணவ, மாண-வியர், தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசினார். தொடர்ந்து காங்., கட்சியை சேர்ந்த துணை மேயர் சார-தாதேவி பேச முயன்றார். மேயர் தடுத்ததால் மேடையில் இருந்து இறங்கி சென்றார்.
இதுகுறித்து சாரதாதேவி கூறியதாவது: என்னிடம் எப்போதுமே மேயர் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறார். கூட்டணி தர்மம் கருதி, அமைதி காத்து வருகிறேன். எந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பு விடுப்பதும் கிடையாது. அலுவலக ஊழியர்கள் மூலம் தகவல் தெரிந்து பங்கேற்று வருகிறேன். தற்போது விழா மேடையில், என்னை பேச அழைத்தபோது, மேயர் தடுத்து அவமானப்படுத்தி விட்டார். இதுகுறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் கவனத்துக்கும், என் கட்சி தலைமைக்கும் தெரியப்படுத்தியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
'சொந்த பணத்தில் விழா'
மேயர் ராமச்சந்திரன் கூறுகையில், ''என் சொந்த பண த்தில், தனிப்பட்ட முறையில் நடத்திய விழா. இது மாநகராட்சி விழா கிடையாது. யார் பங்கேற்க வேண்டும் என திட்டமிட்டு நடத்தி-யதால் மற்றவர்களுக்கு அழைப்பு இல்லை,'' என்றார்.