/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'அனைத்து அரசு துறைகளிலும் ஊழியர் உழைப்பு சுரண்டல்' 'அனைத்து அரசு துறைகளிலும் ஊழியர் உழைப்பு சுரண்டல்'
'அனைத்து அரசு துறைகளிலும் ஊழியர் உழைப்பு சுரண்டல்'
'அனைத்து அரசு துறைகளிலும் ஊழியர் உழைப்பு சுரண்டல்'
'அனைத்து அரசு துறைகளிலும் ஊழியர் உழைப்பு சுரண்டல்'
ADDED : மே 26, 2025 04:38 AM
வேலுார்: ''தமிழகத்தில் அரசு அனைத்து துறைகளிலும் ஊழியர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது,'' என, அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் பாஸ்கரன் கூறினார்.
வேலுார் மாவட்டம் காட்பாடியில் நேற்று நடந்த மருந்தாளு-னர்கள் மாநில பேரவை கூட்டத்தில் பங்கேற்று, நிருபர்களிடம் கூறியதாவது:
ஜூலை, 9ம் தேதி நடக்கும் ஒரு நாள் அகில இந்திய அளவி-லான வேலை நிறுத்தத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் கலந்து கொள்ளும். காலிப்பணியிடங்கள் அரசு துறையில் நிரப்-பாமல் உள்ளது. ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் பலர் வேலை இழப்-பார்கள் என, மத்திய அரசு வெளியிட்ட ஆய்வறிக்கை சுட்டிக்காட்-டியுள்ளது. தமிழகத்தில் அனைத்து அரசு துறைகளிலும் ஊழியர்-களின் உழைப்பை சுரண்டுகிறது. மத்திய, மாநில அரசுகள் முறை-யான காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும்.
பழைய பென்ஷன் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும். 8வது ஊதிய குழு அறிவிக்கப்பட்டும் பணிகள் துவங்கவில்லை. அதை உடனடியாக விரைவுப்
படுத்த வேண்டும். இந்த சூழலில், இந்த வேலை நிறுத்தம் என்-பது மத்திய, மாநில அரசுகளுக்கு ஒரு எச்சரிக்கையை ஏற்ப-டுத்தும் வகையில் அமையும். சட்டசபை கூட்டத்தொடரில், அரசு ஊழியர்களுக்காக அறிவித்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம். அரசுக்கு கால அவகாசம் கொடுக்கிறோம். ஆண்-டுக்கு, 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற கோரிக்கை நிறைவேற்றபடவில்லை. பழைய பென்ஷன் திட்-டமும், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தார். அதை நிறைவேற்ற-வில்லை. இதை நிறைவேற்றக் கோரி, தமிழக அரசுக்கு நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம். மற்ற கட்சிகள் எங்களின் கோரிக்-கைகளை, 2026 சட்டசபை தேர்தலில் வாக்குறுதிகளில் சேர்த்-தாலும், அவர்கள் எப்படி நிறைவேற்றுவார்கள் என விவாதித்து, முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.