ரயிலில் கஞ்சா கடத்தியவர் சிக்கினார்
ரயிலில் கஞ்சா கடத்தியவர் சிக்கினார்
ரயிலில் கஞ்சா கடத்தியவர் சிக்கினார்
ADDED : ஜூன் 06, 2025 01:32 AM
சேலம், போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று, தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில், முன்பதிவற்ற பெட்டியில் சோதனை செய்தனர். அப்போது, ஒரு சீட்டுக்கு அடியில் கேட்பாரற்ற நிலையில், 3 பைகள் இருந்தன. சோதனை செய்தபோது, 24 கிலோ கஞ்சா இருந்தது.
இதனால் தொடர்ந்து போலீசார் ரயிலில் விசாரித்தனர். பின் பயணியரின் பைகளையும் சோதனை செய்தபோது, ஒருவரது பையில், 2 கிலோ கஞ்சா இருந்தது. அவரிடம் விசாரித்ததில், கேரளம், மலப்புரத்தை சேர்ந்த நகபுகான் அலி, 30, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 26 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.