/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வெள்ளத்தில் சிக்கியோரை மீட்க தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை வெள்ளத்தில் சிக்கியோரை மீட்க தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை
வெள்ளத்தில் சிக்கியோரை மீட்க தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை
வெள்ளத்தில் சிக்கியோரை மீட்க தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை
வெள்ளத்தில் சிக்கியோரை மீட்க தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை
ADDED : ஜூன் 06, 2025 01:32 AM
மேட்டூர், தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், சேலம் மாவட்டம் மேட்டூர் தீயணைப்பு குழுவினர் சார்பில், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து, மேட்டூர் காவிரி பாலம் மற்றும் தங்கமாபுரிபட்டணம் உபரிநீர் செல்லும் பகுதியில், மக்களுக்கு விழிப்புணர்வு ஒத்திகை நேற்று நடந்தது. மேட்டூர் ஆர்.டி.ஓ., சுகுமார் தலைமை வகித்தார்.
தாசில்தார் ரமேஷ், மேட்டூர் இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி, மக்கள் முன்னிலையில், தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன், மீன்வளத்துறை ஊழியர்கள், வெள்ளத்தில் சிக்கியோரை மீட்பது குறித்து ஒத்திகையில் ஈடுபட்டனர்.
அதேபோல் வெள் ளம் ஏற்படும்போது ஆறுகளில் எதிர்பாராத விதமாக சிக்கிக்கொண்டவர்களை காப்பாற்றுவது குறித்து, சங்ககிரி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் வீரர்கள், பூலாம்பட்டி, கல்வடங்கம், காவேரிப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள காவிரி ஆற்றில் செயல்முறை விளக்கம் அளித்தனர்.