/உள்ளூர் செய்திகள்/சேலம்/பெரியார் பல்கலையில் முறைகேடு? 10 மாணவர்களிடம் விசாரணைபெரியார் பல்கலையில் முறைகேடு? 10 மாணவர்களிடம் விசாரணை
பெரியார் பல்கலையில் முறைகேடு? 10 மாணவர்களிடம் விசாரணை
பெரியார் பல்கலையில் முறைகேடு? 10 மாணவர்களிடம் விசாரணை
பெரியார் பல்கலையில் முறைகேடு? 10 மாணவர்களிடம் விசாரணை
ADDED : ஜூலை 27, 2024 01:25 AM
சேலம்: சேலம் பெரியார் பல்கலையில், மத்திய அரசின் தீன்தயாள் உபாத்யாயா கிராமின் கவுசல்யா திட்டத்தில் நடந்த திறன் மேம்-பாட்டு பயிற்சியில், 2.50 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, அதில் பயிற்சி பெற்ற மாணவர்கள், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம், தேசிய பழங்குடியினர், ஆதிதிராவிடர் நல கமிஷன-ரிடம் புகார் அளித்தனர்.
இதுகுறித்து விசாரித்த தேசிய ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல கமிஷன், புகார் குறித்து விசாரித்து, அதன் அறிக்கையை வரும், 30க்குள் தாக்கல் செய்ய, மாநகர போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டது. இதனால் புகார் அளித்த மாணவர்கள், 13 பேரும் உரிய ஆவணங்களுடன், சூரமங்கலம் உதவி கமிஷனர் அலுவல-கத்தில் ஆஜராக, போலீஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதில், 10 மாணவர்கள் நேற்று ஆஜராகினர். அவர்களிடம் உதவி கமிஷனர் நிலவழகன் விசாரித்தார்.