/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சேலம் ரயில்வே கோட்டத்தில் லெவல் கிராசிங் விழிப்புணர்வு சேலம் ரயில்வே கோட்டத்தில் லெவல் கிராசிங் விழிப்புணர்வு
சேலம் ரயில்வே கோட்டத்தில் லெவல் கிராசிங் விழிப்புணர்வு
சேலம் ரயில்வே கோட்டத்தில் லெவல் கிராசிங் விழிப்புணர்வு
சேலம் ரயில்வே கோட்டத்தில் லெவல் கிராசிங் விழிப்புணர்வு
ADDED : ஜூன் 06, 2025 01:34 AM
சேலம், ரயில்வே லெவல் கிராசிங்கை கடப்பது குறித்த விழிப்புணர்வு நாள், நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதை ஒட்டி சேலம் ரயில்வே கோட்டம் சார்பில், விழிப்புணர்வு வாகனத்தை, கோட்ட மேலாளர் பன்னாலால், கொடி அசைத்து தொடங்கி வைத்தார். கூடுதல் கோட்ட மேலாளர் சிவலிங்கம் உள்ளிட்ட ரயில்வே அலுவலர்கள் பங்கேற்றனர்.
விழிப்புணர்வு வாகனம், சேலம், ஆத்துார், சின்னசேலம், விருதாசலம் பகுதிகளில், லெவல் கிராசிங் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இரண்டாம் நாளாக இன்று, ஈரோடு, கொடிமுடி, கரூர், நாமக்கல், ராசிபுரம் வழியே, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. இதில் ரயில்கள் செல்லும்போது, ரயில்வே கேட்டை தாண்டி செல்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பல்வேறு விளக்கப்படம், துண்டு பிரசுரம் வழங்கப்படுகின்றன.