/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பக்ரீத் பண்டிகை எதிரொலி ஆடுகள் விற்பனை அமோகம் பக்ரீத் பண்டிகை எதிரொலி ஆடுகள் விற்பனை அமோகம்
பக்ரீத் பண்டிகை எதிரொலி ஆடுகள் விற்பனை அமோகம்
பக்ரீத் பண்டிகை எதிரொலி ஆடுகள் விற்பனை அமோகம்
பக்ரீத் பண்டிகை எதிரொலி ஆடுகள் விற்பனை அமோகம்
ADDED : ஜூன் 06, 2025 01:34 AM
அ.பட்டணம், நாளை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, அயோத்தியாப்பட்டணம் வாரச்சந்தைக்கு நேற்று, ஏராளமான விவசாயிகள், 1,500 ஆடுகளை கொண்டு வந்தனர். வெள்ளாடு, சேலம் கருப்பு, தலச்சேரி, செம்மறியாடு உள்ளிட்ட பல்வேறு வகை ஆடுகள் கொண்டுவரப்பட்டன.
கடந்த வாரம், 10 கிலோ கிடா, 4,000 முதல், 5,500 ரூபாய் வரை விற்றநிலையில் நேற்று, 4,500 முதல், 6,500 ரூபாய் வரை விலைபோனது. அதேபோல், கடந்த வாரம், 10 கிலோ பெண் ஆடு, 3,500 முதல், 4,000 ரூபாய் வரை விற்ற நிலையில், நேற்று, 3,800 முதல், 5,000 ரூபாய் வரை விற்பனையானது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதன்மூலம், 50 லட்சம் ரூபாய் வரை விற்பனை நடந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
விவசாயிகள் கூறுகையில், 'பக்ரீத் மட்டுமின்றி, அயோத்தியாப்பட்டணம், அரூர், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கோவில் பண்டிகைகளில் நேர்த்திக்கடன் செலுத்த, ஏராளமானோர் ஆடுகளை வாங்க வந்ததால் விற்பனை களைகட்டியது' என்றனர்.