/உள்ளூர் செய்திகள்/சேலம்/இங்கிலாந்து சென்று திரும்பிய கல்லுாரி மாணவருக்கு பாராட்டுஇங்கிலாந்து சென்று திரும்பிய கல்லுாரி மாணவருக்கு பாராட்டு
இங்கிலாந்து சென்று திரும்பிய கல்லுாரி மாணவருக்கு பாராட்டு
இங்கிலாந்து சென்று திரும்பிய கல்லுாரி மாணவருக்கு பாராட்டு
இங்கிலாந்து சென்று திரும்பிய கல்லுாரி மாணவருக்கு பாராட்டு
ADDED : ஜூன் 20, 2024 07:26 AM
சேலம்: தமிழகத்தில் உயர் கல்வி மாணவ, மாணவியரின் வேலைவாய்ப்புக்கு, 'நான் முதல்வன்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதில் இங்கிலாந்தில் உள்ள டர்ஹாம் பல்கலையில் பயிற்சி பெற, புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழக அரசு, பிரிட்டிஷ் கவுன்சில் இணைந்து நடத்திய தரவு பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவு குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் சிறந்து விளங்கிய, 25 பேர், இங்கிலாந்தில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதில் ஒருவராக, சேலம் அரசு கலைக்கல்லுாரியில் இளநிலை கணினி அறிவியல் மாணவர் மிதுனராஜன் தேர்வு பெற்று, இங்கிலாந்தில், 15 நாள் பயிற்சி பெற்றார். நேற்று கல்லுாரி திரும்பிய அவரை, முதல்வர் செண்பகலட்சுமி உள்ளிட்ட பேராசிரியர்கள் பாராட்டினர்.