/உள்ளூர் செய்திகள்/சேலம்/துண்டிக்கப்பட்ட கையை நோயாளிக்கு இணைத்து காவேரி மருத்துவமனை அசத்தல்துண்டிக்கப்பட்ட கையை நோயாளிக்கு இணைத்து காவேரி மருத்துவமனை அசத்தல்
துண்டிக்கப்பட்ட கையை நோயாளிக்கு இணைத்து காவேரி மருத்துவமனை அசத்தல்
துண்டிக்கப்பட்ட கையை நோயாளிக்கு இணைத்து காவேரி மருத்துவமனை அசத்தல்
துண்டிக்கப்பட்ட கையை நோயாளிக்கு இணைத்து காவேரி மருத்துவமனை அசத்தல்
ADDED : ஜூன் 08, 2024 02:46 AM
சேலம்: சேலம் காவேரி மருத்துவமனை பிளாஸ்டிக் மற்றும் அழகுசாதன அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுரேஷ்குமார் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 48 வயது மதிக்கத்தக்க நபருக்கு, கடந்த ஏப்.,26ல், மணிக்கட்டில் காயம் ஏற்பட்டு, வலது கை துண்டானது. அந்த கையை ஐஸ் பெட்டியில் வைத்தபடி, சிகிச்சைக்கு வந்தார். உடனடியாக நான் மற்றும் எலும்பியல் நிபுணர் அருண் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் நோயாளியை பரிசோதித்து, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 6 மணி நேர சிகிச்சையில், அவருக்கு துண்டிக்கப்பட்ட கையை இணைத்து விட்டோம். இதை, மைக்ரோ -வாஸ்குலர் அறுவை சிகிச்சை என்பர்.
அறுவை சிகிச்சைக்கு பின் அவரை, ஐசியு., வார்டில் அனுமதித்து, தொடர் சிகிச்சையில் பராமரித்து வந்ததன் காரணமாக, 14 நாட்களுக்கு பின், அவரது கை நன்கு குணமாகி, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். விபத்து அல்லது வேறு காரணங்களால் உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்டால், அதை முறையாக பாதுகாக்க சுத்தமான, உலர்ந்த பிளாஸ்டிக் கவருக்குள் வைத்து, அதை சுற்றி ஐஸ் கட்டிகளை வைத்து, அதை ஐஸ் பெட்டியில் வைத்து கொண்டு வர வேண்டும்.
இதில், விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே, சேதமான உடல் பாகங்களை மீண்டும் முழுவீச்சில் பயன்படுத்த முடியும்.இவ்வாறு கூறினார்.
மருத்துவமனை இயக்குனர் செல்வம், தலைமை மருத்துவ இயக்குனர் சுந்தரராஜன், மருத்துவ இயக்குனர் அபிராமி ஆகியோர் உடனிருந்தனர்.