/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பூட்டை உடைத்து நகை திருட்டு; மூன்று பேர் கைது பூட்டை உடைத்து நகை திருட்டு; மூன்று பேர் கைது
பூட்டை உடைத்து நகை திருட்டு; மூன்று பேர் கைது
பூட்டை உடைத்து நகை திருட்டு; மூன்று பேர் கைது
பூட்டை உடைத்து நகை திருட்டு; மூன்று பேர் கைது
ADDED : ஜூன் 08, 2024 02:46 AM
சேலம்: பூ வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து, மூன்றரை பவுன் நகையை திருடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம், கிச்சிபாளையம், சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்தவர் சதீஷ், 37, இவர் தனது தாயுடன், பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த 5ல், இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர். இரவு, 7:00 மணிக்கு வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த மூன்றரை பவுன் நகை திருடப்பட்டிருந்தது.
கிச்சிபாளையம் போலீசார், கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து, சூரமங்கலம் வெள்ளைய கவுண்டன் தெருவை சேர்ந்த முருகன், 23, இவரது தம்பி மோகன்ராஜ், 22, தினேஷ்குமார், 23 ஆகிய மூவரையும் நேற்று கைது செய்து நகையை மீட்டனர்.
கைது செய்யப்பட்ட ரவுடி முருகன், அவரது தம்பி ரவுடி மோகன்ராஜ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.