/உள்ளூர் செய்திகள்/சேலம்/குகை காளியம்மன், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்குகை காளியம்மன், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
குகை காளியம்மன், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
குகை காளியம்மன், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
குகை காளியம்மன், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : ஜூன் 03, 2024 07:07 AM
சேலம் : சேலம் குகை காளியம்மன், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
விழாவிற்காக கடந்த, 19ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. நேற்று முன்தினம் காலை கோபுர கலசங்கள் நிறுவுதல், நான்காம் கால யாக வேள்வி, மதியம் அஷ்டபந்தனம் சாத்துதல், மாலை, 5:00 மணிக்கு ஐந்தாம் கால யாக வேள்வி நடந்தது.நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு ஆறாம் கால யாக வேள்வி, 5:00 மணிக்கு கடம் புறப்பாடு, 5:30 மணியில் இருந்து, 6:00 மணிக்குள் விநாயகர், முனீஸ்வரர், மாரியம்மன், காளியம்மன், பாலதண்டாயுதபாணி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. அப்போது சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க, புனிதநீர் கலசத்தின் மீது ஊற்றப்பட்டது.தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவில் எம்.எல்.ஏ., பாலசுப்பிரமணியன், கோவில் செயல் அலுவலர் ராமஜோதி மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.