மழை நீரில் அடித்து செல்லப்பட்ட சாலை
மழை நீரில் அடித்து செல்லப்பட்ட சாலை
மழை நீரில் அடித்து செல்லப்பட்ட சாலை
ADDED : ஜூன் 03, 2024 07:07 AM
பனமரத்துப்பட்டி : பனமரத்துப்பட்டி ஒன்றியம், நாழிக்கல்பட்டி ஊராட்சியில் இருந்து, தம்மநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு தார்ச்சாலை செல்கிறது.
சமீபத்தில், தார்சாலையில் பள்ளம் தோண்டி, குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. பள்ளத்தை சரியாக மூடி, மீண்டும் தார்சாலை அமைக்கவில்லை. தார்சாலை, மண் சாலையாக மாறி, படுமோசமாக சீரழிந்துள்ளது.இந்நிலையில், கடந்த வாரத்தில் கனமழை பெய்து, ஜருகுமலை ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, நாழிக்கல்பட்டி-தம்மநாயக்கன்பட்டி சாலையில் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டது. தாசநாயக்கன்பட்டி, நாழிக்கல்பட்டி ஆகிய பகுதியிலிருந்து வரும் ஓடை சந்திக்கும் இடத்தில், தார்சாலை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால், பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.அச்சாலையில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சாலையிலுள்ள பள்ளத்தில் விழும் அபாயமுள்ளது. தார்சாலையை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.