/உள்ளூர் செய்திகள்/சேலம்/விஷச்சாராய மரணத்துக்கு நீதி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்புவிஷச்சாராய மரணத்துக்கு நீதி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
விஷச்சாராய மரணத்துக்கு நீதி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
விஷச்சாராய மரணத்துக்கு நீதி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
விஷச்சாராய மரணத்துக்கு நீதி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ADDED : ஜூன் 28, 2024 01:23 AM
ஆத்துார், விஷச்சாராய மரணத்துக்கு நீதி கேட்டு, அ.தி.மு.க.,வின் நகராட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்துார் நகராட்சி கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, நகராட்சி தலைவி நிர்மலாபபிதா தலைமை வகித்தார். அதில், 24 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. தொடர்ந்து நடந்த விவாதம்:
தி.மு.க., கவுன்சிலர் சந்திரா: அ.தி.மு.க., ஆட்சியில் பல்வேறு சம்பவங்களில் இறந்தவர்களுக்கு நிதி வழங்கவில்லை.
காங்., கவுன்சிலர் தேவேந்திரன்: நகராட்சியில் எந்த தகவல் கேட்டும் அதற்கான பதிலை பெறமுடியவில்லை.
கமிஷனர் சையது முஸ்தபா கமால்: எழுத்துப்பூர்வ மனுக்களுக்கு தகவல் வழங்கப்படும்.
வி.சி., கவுன்சிலர் நாராயணன்: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன், கல்வராயன்மலைக்கு வந்தபோது சாராய ஊறல் அதிகளவில் இருந்ததாக, சமீபத்தில் பேசியுள்ளார். அ.தி.மு.க., ஆட்சியில் சாராயம் அதிகளவில் இருந்ததை அவரே ஒப்புக்கொண்டார்.
தி.மு.க., கவுன்சிலர் பிரவீணா: ஆத்துார் அரசு மருத்துவமனை பகுதியில் குப்பை, கழிவு கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
சுகாதார ஆய்வாளர் குமார்: ஆத்துார், நரசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில் சேகரமாகும் கழிவுநீர், வசிஷ்ட நதியில் விடுவதை தவிர்க்க, 33 கோடி ரூபாயில் கழிவுநீர் சுத்திகரிப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஒப்பந்தம் விடப்பட்டு பணி தொடங்கும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
முன்னதாக கூட்டம் தொடங்கியதும், கறுப்பு உடை அணிந்து வந்திருந்த, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உமாசங்கரி, ராஜேஷ்குமார், கலைச்செல்வி, மணி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். அப்போது தி.மு.க., கவுன்சிலர்கள், 'கூட்டத்தில் பேச தைரியம் இல்லாமல் பயந்து கொண்டு செல்கிறீர்கள்' என, கோஷம்
எழுப்பினர்
இதுகுறித்து, அ.தி.மு.க., கவுன்சிலர் உமாசங்கரி, நிருபர்களிடம்
கூறியதாவது:
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்துக்கு உரிய நீதி வேண்டும். சட்டசபையில், அ.தி.மு.க.,வினரை பேச விடாமல், தி.மு.க., அராஜகம் செய்கிறது. எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளோம். 60 பேர் இறந்த நிலையில், தி.மு.க.,வினரே உட்கார்ந்திருக்கும்போது நாங்கள் பயந்து செல்ல வேண்டிய அவசியமில்லை. தமிழகத்தில் நடக்கும் சர்வாதிகார ஆட்சியை அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.