ADDED : ஜூன் 28, 2024 02:06 AM
மகுடஞ்சாவடி, மகுடஞ்சாவடி, நடுவனேரியில், மக்கள் சந்திப்பு முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து, 153 பயனாளிகளுக்கு, 1.90 கோடி ரூபாய் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாவட்ட அளவில் அதிகாரிகள், நடுவனேரி ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு குழுக்களாக சென்று, மக்களின் அடிப்படை பிரச்னை, பல்வேறு பொது பிரச்னைகளை கேட்டறிந்து தீர்வு வழங்கினர். முன்னதாக கால்நடை பராமரிப்பு, மருத்துவம், தோட்டக்கலை, வேளாண், சமூக நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார்.