புத்தொழில் மையம்; அமைச்சர்கள் திறப்பு
புத்தொழில் மையம்; அமைச்சர்கள் திறப்பு
புத்தொழில் மையம்; அமைச்சர்கள் திறப்பு
ADDED : மே 31, 2025 06:19 AM
சேலம்: தமிழக புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில், சேலம் புது பஸ் ஸ்டாண்ட் எதிரே, சேலம் உற்பத்தி திறன் கவுன்சில் அலுவலக கட்டடத்தில், சேலம், நாமக்கல் சுற்றுவட்டார புத்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உதவிகள் செய்தவற்கு, வட்டார புத்தொழில் மையம் அமைக்கப்பட்டது.
அதை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அமைச்சர் அன்பரசன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், நேற்று திறந்து வைத்தனர். கலெக்டர் பிருந்தாதேவி உள்ளிட்ட சிறு தொழில்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
அங்கு, புத்தொழில் நிறுவனங்களுக்கான பணியிட பகிர்வு வசதி, 50 பேர் பங்கு பெறும் பயிற்சி அரங்கம், 10 பேர் அமரும்படி, 'போர்டு' அறை, 2, 3ம் நிலை நகரங்களின் புத்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை குறைந்த கட்டணத்தில் செய்து தரும்படி மையம் செயல்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.