அரளி விலை உயர்வு; விவசாயிகள் நிம்மதி
அரளி விலை உயர்வு; விவசாயிகள் நிம்மதி
அரளி விலை உயர்வு; விவசாயிகள் நிம்மதி
ADDED : ஜூலை 05, 2024 01:05 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 1,100 ஏக்கரில் அரளி நடவு செய்-யப்பட்டுள்ளது.
தினமும் அறுவடை செய்யப்படும் அரளி, தமி-ழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சமீபத்தில் பெய்த மழையால் அரளி உற்பத்தி அதிகரித்து, கிலோ, 20 ரூபாயாக விலை சரிந்தது. செடியில் இருந்து பூ பறிக்க கிலோ, 50 ரூபாய் கூலி வழங்கப்படுவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. தற்போது வெயில் அடிப்-பதால் அரளி உற்பத்தி சராசரி அளவில் உள்ளது. விலையும் மெல்ல உயர்ந்து வருகிறது.அதன்படி சேலத்தில் கடந்த, 1ல் ஒரு கிலோ சாதா அரளி, 40 ரூபாய், மஞ்சள், செவ்வரளி, 120; 2ல் சாதா, 50, மஞ்சள், செவ்வ-ரளி, 120; 3ல் சாதா, 80, மஞ்சள், செவ்வரளி, 160; 4ல் சாதா, 120, மஞ்சள், செவ்வரளி, 200 ரூபாயாக விலை உயர்ந்தது. சில நாட்க-ளாக நஷ்டத்தை சந்தித்த விவசாயிகள், தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.