/உள்ளூர் செய்திகள்/சேலம்/98,932 ஹெக்டேரில் வேளாண் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி98,932 ஹெக்டேரில் வேளாண் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி
98,932 ஹெக்டேரில் வேளாண் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி
98,932 ஹெக்டேரில் வேளாண் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி
98,932 ஹெக்டேரில் வேளாண் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி
ADDED : ஜூலை 05, 2024 01:05 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில் வேளாண், சார்பு துறைகளின் முன்னோடி திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவல-கத்தில் நேற்று நடந்தது.
இதற்கு தலைமை வகித்து கலெக்டர் பிருந்தாதேவி பேசியதா-வது: துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து வேளாண் துறை சார்ந்த திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் விதைகள், ரசாயன உரங்கள் வினியோகம் மற்றும் இருப்பு, உழவர் சந்தைகள், குளிர்பதன கிடங்குகள், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், மல்பெரி சாகு-படி, பட்டுக்கூடு அறுவடை விபரங்கள், விவசாயம் சார்ந்த கடன்கள், விவசாய மின் இணைப்புகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மாவட்டத்தில், 2024 - 25 நிதியாண்டில் கடந்த மே வரை, 16,114.9 ஹெக்டேரில் நெல், சோளம், கம்பு, ராகி, மக்காச்சோளம் உள்ளிட்ட வேளாண் பயிர்கள், 82,817.58 ஹெக்டேரில் மரவள்ளி, தக்காளி, சின்ன வெங்காயம், மிளகாய் உள்ளிட்ட தோட்டக்க-லைப்பயிர்கள் என, 98,932.48 ஹெக்டேரில் வேளாண், தோட்டக்-கலை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை முழுமையாக கொண்டு சேர்க்கும் பணியை அலுவலர்கள் முனைப்போடு மேற்-கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.