ADDED : ஜூன் 22, 2024 12:59 AM
சேலம்: சேலம் சோனா கல்வி குழுமத்தில் சர்வதேச அளவில் கிரிக்கெட் வலை பயிற்சிக்கு திறப்பு விழா, கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
குழும துணைத்தலைவர் தியாகு தலைமை வகித்தார். அதில், 'ஹாட் மாண்டே மிஸஸ் இந்தியா - 2021' அமிஷா சேத்தி, தமிழக கிரிக்கெட் தேர்வு குழு உறுப்பினர் அரசு, சோனா கிரிக்கெட் அகாடமியை தொடங்கி வைத்தனர்.தொடர்ந்து தியாகு பேசுகையில், ''பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வரும் சோனா கல்வி குழுமம் தற்போது விளையாட்டு துறையிலும் சிறப்பாக செயல்பட புது முயற்சியாக அதிநவீன வசதிகளுடன் கூடிய சோனா கிரிகெட் அகாடமியை தொடங்கியுள்ளது. விளையாட்டு துறையில் ஆர்வம் உள்ளவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறந்து விளங்க வேண்டும்,'' என்றார். இதில் சோனா கல்வி குழும முதல்வர்கள் கார்த்திகேயன், செந்தில்குமார், காதர்நவாஷ், கவிதா, நரேஷ்குமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.