ADDED : செப் 18, 2025 02:28 AM
இடைப்பாடி, இடைப்பாடி, வெள்ளாண்டிவலசை சேர்ந்தவர் பாலாஜி, 32. அதே பகுதியில் உள்ள ஓட்டலில் சப்ளையராக பணிபுரிந்தார். அவருக்கு மனைவி புனிதா, 26, இரு பெண் குழந்தைகள் உள்ளனர். பாலாஜிக்கு கடன் இருந்ததோடு, மது அருந்தி வந்ததால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது.
கடந்த, 15ல் மது அருந்தி வந்த பாலாஜியால், அவரது மனைவி கோபித்துக்கொண்டு, அவரது தாய் வீட்டுக்கு சென்றார். மனமுடைந்த பாலாஜி, நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாலாஜியின் தாய் பரிமளா புகார்படி இடைப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறுகையில், 'கடந்த ஜூன், 12ல் பாலாஜி, அவரது மனைவி புனிதா, 2 பெண் குழந்தைகள் ஆகியோர், பூச்சி கொல்லி மருந்தை, தோசையில் ஊற்றி சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர். அருகில் இருந்தவர்களால், அப்போது, 4 பேரும் காப்பற்றப்பட்டனர். 3 மாதத்துக்கு பின், பாலாஜி தற்கொலை செய்து கொண்டுள்ளார்' என்றனர்.