/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கேரள மாநிலத்தை சேர்ந்த விடுதி ஊழியர் மர்மச்சாவு கேரள மாநிலத்தை சேர்ந்த விடுதி ஊழியர் மர்மச்சாவு
கேரள மாநிலத்தை சேர்ந்த விடுதி ஊழியர் மர்மச்சாவு
கேரள மாநிலத்தை சேர்ந்த விடுதி ஊழியர் மர்மச்சாவு
கேரள மாநிலத்தை சேர்ந்த விடுதி ஊழியர் மர்மச்சாவு
ADDED : செப் 01, 2025 04:15 AM
ஏற்காடு,: கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் சுதீஷ்குமார். இவர், ஏற்-காடு, தலைச்சோலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வேலை செய்து கொண்டு, மனைவி மகேஸ்வரியுடன் வசித்தார். நேற்று காலை சுதீஷ்குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு வலிப்பு வந்தது. உடனே மகேஸ்வரி, ஆம்புலன்ஸூக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், சுதீஷ்குமார் இறந்ததாக தெரிவித்தனர். இருப்பினும், ஏற்காடு மருத்துவம-னைக்கு கொண்டு சென்றனர். அப்போதும், மருத்துவர்கள் இறந்-ததை உறுதிப்படுத்தினர். ஏற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறுகையில், 'சுதீஷ்குமாரின் மனைவி என்பதற்கான ஆதாரம், மகேஸ்வரியிடம் இல்லை. இதனால், அவரது மகன்க-ளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்த பின் தான் முழு விபரம் தெரியும்' என்றனர்.